நாட்றம்பள்ளி அருகே வனப்பகுதி ஆக்கிரமிப்பு மீட்டுத்தரக்கோரி போராட்டம்


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் அளவிற்கு மரங்களை வெட்டி விவசாய நிலமாக்கும் முயற்சியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஈடுபடுவதாக, மல்லகுண்டா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி முன்னிலையில், 25 க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வனப்பகுதி என்றும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி இந்த இடங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு காட்டு வளத்தையும் நாட்டு வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கையில் தாமதம் ஆனால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.


– S.மோகன்


Popular posts
JEE மெயின், NEET 2020 ஆகியவற்றுக்கான மாதிரித் தேர்வுகளுக்காக செயற்கை நுண்ணறிவு சக்தி கொண்ட கைபேசி செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் வெளியிட்டார்
Image
வளரும் கலைஞர்கள், மாணவர்கள், நாடக ஆர்வலர்களுக்காக மே 10 முதல் 17 வரை ஆன்லைன் முறையில் கருத்தரங்கு : கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி நடத்துகிறது
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ‘இல்லம் திரும்புவோம்’ என்ற திட்டத்தின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 1565 சிறப்பு ரயில்கள் மூலமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இல்லம் திரும்பினர்
Image
தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
Image
தாகம் தீர்ப்பாரா அமைச்சர்! ஏக்கத்தில் மல்லகுண்டா ஊராட்சி மக்கள்!
Image